Images
  • china (1)
    (படம்:  Reuters/Thomas Peter)

சீனாவில் 1,100 சமூக ஊடகக் கணக்குகளை மூடியிருக்கும் காவல் துறை

சீனக் காவல் துறை1,100 சமூக ஊடகக் கணக்குகளை முடக்கியிருப்பதாக நேற்று (டிசம்பர் 8) தெரிவிக்கப்பட்டது.

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தினால் அந்தச் சமூக ஊடகக் கணக்குகள் மூடப்பட்டன.

மற்றவர்களை ஏமாற்றுவது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் அந்தக் கணக்குகளின் உரிமையாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

மேலும் 31 இணையப் பக்கங்களும் அதே காரணங்களுக்காக மூடப்பட்டன.

அண்மையில் சீனாவின் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையாகி வருகின்றன.

இணையப்பக்கங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளும் அதிகரித்திருக்கின்றன.
 

Top