Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

லடாக்கில் பிடிபட்ட சீன ராணுவ வீரரை விடுவித்த இந்தியா

லடாக்கில் பிடிபட்ட சீன ராணுவ வீரரை விடுவித்த இந்தியா 

வாசிப்புநேரம் -

லடாக்கில் பிடிபட்ட சீன ராணுவ வீரரை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 8ஆம் தேதி சீன ராணுவ வீரர் இந்தியாவின் லடாக் எல்லையில் கைது செய்யப்பட்டார்.

அவரைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது.

அதைத்தொடர்ந்து இன்று காலை 10:10 மணியவில் Chushul-Moldo பகுதியில் கைது செய்யப்பட்ட வீரரை இந்தியா சீனாவிடம் ஒப்படைத்தது.

கடந்த அக்டோபர் மாதமும் சீன ராணுவ வீரர் ஒருவர் இந்தியாவிடம் பிடிபட்டார். பின்னர் அவர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லையில் அவ்வப்போது பூசல்கள் ஏற்பட்டுவருகின்றன.

கடந்த ஜூன் மாதம் எல்லையில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மாண்டனர்.

பிறகு எல்லையில் பதற்றத்தைக் குறைக்க இருதரப்பினரும் அவ்வப்போது பேச்சு நடத்தி வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்