Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சென்றுவர சிறப்பு அனுமதிச் சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் மக்களின் நடமாட்டமும் போக்குவரத்துச் சேவைகளும் அணுக்கமாக கண்காணிக்கப்படுகின்றன.

வாசிப்புநேரம் -
சீனாவில் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சென்றுவர சிறப்பு அனுமதிச் சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்

(படம்: REUTERS/Aly Song)

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் மக்களின் நடமாட்டமும் போக்குவரத்துச் சேவைகளும் அணுக்கமாக கண்காணிக்கப்படுகின்றன.

குடியிருப்பு வட்டாரங்களுக்கும் புறநகர் பகுதிகளுக்கும் சென்றுவர, சிறப்பு அனுமதிச் சீட்டுக்கு ஒவ்வொருவரும் விண்ணப்பிப்பதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நுழைவாயிலிலும் தனிநபர்களின் உடல்வெப்பநிலை கண்டிப்பாகப் பரிசோதிக்கப்படும்.

சீனப் புத்தாண்டுக்குப் பிறகும் விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

அதை முன்னிட்டு, COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சீன அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பள்ளிகளுக்குத் திரும்பும் மாணவர்களும் வெவ்வேறு குழுக்களாக வகுப்புகளுக்குச் செல்வர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்