Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்குச் சீனா தொடர்ந்து ஆதரவு

ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு (Carrie Lam) சீன மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக, ஹாங்காங்கிற்கான சீன ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்குச் சீனா தொடர்ந்து ஆதரவு

படம்: REUTERS/Bobby Yip

ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு (Carrie Lam) சீன மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக, ஹாங்காங்கிற்கான சீன ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் அரசாங்கத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் இயக்குநர் வாங் சிமின் (Wang Zhimin) அவ்வாறு கூறினார்.

சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றின் தொடர்பில், பெரிய அளவிலான அரசியல் நெருக்கடியைத் திருமதி லாம் எதிர்நோக்கியபோதும் சீனா அவருக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக அந்த அதிகாரி சொன்னார்.

ஹாங்காங் காவல்துறைக்குத் திரு வாங் தமது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டார்.

அண்மையில் ஹாங்காங் சட்டமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

எவ்வித நோக்கத்துக்காகப் போராட்டம் நடத்தப்பட்டாலும், வன்முறையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதைத் திரு வாங் வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்