Images
  • china taiwan
    (கோப்புப் படம்: REUTERS/Tyrone Siu)

சீனப் படைகள் தைவானிய வட்டாரத்துக்கு மிக அருகே அதிகம் நெருங்கினால் பெய்ச்சிங் கடும் பதிலடியை எதிர்நோக்க நேரிடலாம்: தைவான்

சீனப் படைகள் தைவான் வட்டாரத்திற்கு மிக அருகே சென்றால், பெய்ச்சிங் கடுமையான பதிலடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என்று தைவான் எச்சரித்துள்ளது.

சீனா தொடர்ந்து 4 நாளாகத் தைவானின் தற்காப்பு வட்டாரத்திற்குள் சென்றுவருகிறது.

அதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் ராணுவப் பதற்றம் அதிகரித்துள்ளது.

அந்த வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கிலேயே ராணுவப் பயிற்சியை மேற்கொண்டதாகச் சீனா குறிப்பிட்டது.

சீனாவின் ராணுவ ஆற்றல் அதிகரித்துவருவது குறித்து தைவானின் தற்காப்பு அமைச்சு கவலை தெரிவித்தது.

சீனாவிடம் அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களும்
நீரிலும் நிலத்திலும் தாக்குதலுக்காகப் பயன்படுத்தக்கூடிய கப்பல்களும் உள்ளதாகத் தைவான் கூறுகிறது.

இருப்பினும் தைவான், அமெரிக்காவுடன் கொண்டிருக்கும் நட்பினால், சீனாவுடன் அதன் உறவுகள் வலுவிழந்ததாக, சீனாவின் தைவானிய விவகாரங்களுக்கான அலுவலகம் குறைகூறியது. 

Top