Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவானின் எந்தவொரு பிரிவினைவாத நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது: சீனா

தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாய் இங் வென் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தைவானின் நிலைப்பாட்டில் சீனாவிற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை என்று பெய்ச்சிங் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தைவானின் எந்தவொரு பிரிவினைவாத நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது: சீனா

படம்: AFP

தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாய் இங் வென் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தைவானின் நிலைப்பாட்டில் சீனாவிற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை என்று பெய்ச்சிங் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், தைவானின் எந்தவொரு பிரிவினைவாத நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரே சீனா கொள்கையைத் தான் உலகம் எப்போதும் அங்கீகரிக்கும் என்றும் பெய்ச்சிங் கூறியது.

சீனாவின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று தைவானிய அதிபர் சாய் இங் வென் கூறியதைத் தொடர்ந்து சீனாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஒரு நாடு, இரு ஆட்சி' என்ற அமைப்பு முறையைத் தைவான் ஏற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்