Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இளம் பிள்ளைகளுக்கும் தடுப்பூசி போட, முதலில் ஒப்புதல் அளித்துள்ள சீனா

இளம் பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடுவதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாகச் சீனா உருவெடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
இளம் பிள்ளைகளுக்கும் தடுப்பூசி போட, முதலில் ஒப்புதல் அளித்துள்ள சீனா

(படம்: AFP)

இளம் பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடுவதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாகச் சீனா உருவெடுத்துள்ளது.

Sinovac தடுப்புமருந்தை இளம் பிள்ளைகளுக்குச் செலுத்த, அவசரகால அடிப்படையில், சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

இனி, 3 வயதுக் குழந்தைகள்கூட சீனாவில், அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

சீனாவில், Sinovac தடுப்புமருந்தை 3 இல் இருந்து 17 வயது வரையிலான பிள்ளைகளுக்குப் பயன்படுத்த, அண்மையில் அனுமதி வழங்கப்பட்டதாக அந்த மருந்தாக்க நிறுவனத்தின் பேச்சாளர் AFP-யிடம் கூறினார்.

இருப்பினும், பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கை எப்போது தொடங்கும் என்பது, தெளிவாகத் தெரியவில்லை.

சீனா, தனது மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினருக்கு இவ்வாண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடத் திட்டமிடுகிறது.

அதன் மக்கள் தொகை 1.41 பில்லியன்.

சீனா, இதுவரை 777 மில்லியன் அளவுள்ள தடுப்புமருந்துகளைக் குடியிருப்பாளர்களுக்குச் செலுத்தியுள்ளது.

- AFP/dv 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்