Images
  • china (1)
    படம்: AFP

சீனா: ஹைனான் தடையற்ற வர்த்தகப் பகுதி 2020ஆம் ஆண்டிற்குள் அமைக்கப்படும்

சீனா, 2020ஆம் ஆண்டிற்குள், ஹைனான் மாநிலத்தில் தடையற்ற வர்த்தகப் பகுதியை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றின் அனைத்துலக, வட்டாரத் தலைமையகங்களை ஹைனானில் நிறுவிக்கொள்ள அது வகைசெய்யும்.

மாநிலப் பொருளியலில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவது நோக்கம்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் அதிகமான பொருளியல் சுதந்திரம் வழங்கப்படும் என சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping) கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 13) அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தடையற்ற வர்த்தகப் பகுதி குறித்த அறிவிப்பு வெளியானது. 2025ஆம் ஆண்டிற்குள் ஹைனான் துறைமுகப் பணிகளும் நிறைவுறும்.

அதன் கட்டுமானத்தில் பங்கேற்க வெளிநாட்டு நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.


Top