Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: தடுப்பூசித் திட்ட இலக்குகள் எட்டப்பட்டால், அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்

சீனா அதன் தடுப்பூசித் திட்ட இலக்குகளை அடைந்துவிட்டால்,  அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடும். 

வாசிப்புநேரம் -
சீனா: தடுப்பூசித் திட்ட இலக்குகள் எட்டப்பட்டால், அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்

படம்: AP Images

சீனா அதன் தடுப்பூசித் திட்ட இலக்குகளை அடைந்துவிட்டால், அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடும்.

அடுத்த ஆண்டுத் தொடக்கத்துக்குள் அதன் மக்கள் தொகையில் குறைந்தது 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட சீனா இலக்குக் கொண்டுள்ளது.

ஏனைய நாடுகளுடன் எல்லைக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற அது வழிவகுக்கும்.

இருப்பினும், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மற்ற பெரிய பொருளியல்களை விட சீனா பின்தங்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஷாங்ஹாய் நகரில் கிருமித்தொற்றைக் கையாளும் குழுவின் தலைவர் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.

திங்கட்கிழமை நிலவரப்படி, சுமார் 142 மில்லியன் முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகச் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் ஜூன் மாதத்துக்குள், மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடச் சீனா திட்டமிடுகிறது.

ஆனால் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக South China Morning Post நாளேடு குறிப்பிட்டது.

உயர்கல்வி படித்தவர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட பல குடியிருப்பாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவருகின்றனர் என்று உள்ளூர்க் கருத்தாய்வுகள் காட்டுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்