Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா வீகர் சிறுபான்மையினரை நடத்தும் விதம் 'மனித குலத்திற்கு எதிரானது'- உரிமைக் குழு

சீனா, வீகர் (Uighur) சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிவதாக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா வீகர் சிறுபான்மையினரை நடத்தும் விதம் 'மனித குலத்திற்கு எதிரானது'- உரிமைக் குழு

(படம்: AFP/Ozan Kose)

சீனா, வீகர் (Uighur) சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிவதாக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) தெரிவித்துள்ளது.

அது குறித்து அமைப்பும் Stanford சட்டக் கல்லூரியின் மனித உரிமை மற்றும் சச்சரவுகளுக்கான சமரச அமைப்பும் இணைந்து அறிக்கை ஒன்றை நேற்று (ஏப்ரல் 19) வெளியிட்டன.

மேற்கு சின்ஜியாங் பகுதியின் ஆகப் பெரிய இனத்தைச் சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பெய்ச்சிங் சிறையடைத்துள்ளதாகவும், மேலும் மில்லியன் கணக்கானோரைக் கடுமையான கண்காணிப்பு, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

சீன அரசாங்கம், துருக்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான குற்றங்களைத் தொடர்ந்து புரிந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டது.

துருக்கிய முஸ்லிம் கலாசாரத்தையும் சமயத்தையும் அழிப்பதற்காகவே சீனா அங்கு முகாம்கள் உருவாக்குவதுபோல் தோன்றுவதாக அது சொன்னது.

அங்கு செயல்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளை மாற்ற, உலக அரசாங்கங்கள் ஒன்றுகூடி சீனாவிற்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்று மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியது.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்