Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிள்ளைகள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் தடுக்க ஒத்துழைக்கத் தயார்- சீன நிறுவனங்கள்

பிள்ளைகள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் தடுக்க ஒத்துழைக்கத் தயார்- சீன நிறுவனங்கள்

வாசிப்புநேரம் -

பிள்ளைகள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாவதைத் தடுக்க 200-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஒத்துழைப்புத் தர உறுதியளித்துள்ளன.

சீனாவின் வீடியோ விளையாட்டுகளைக் கண்காணிக்கும் CGIGC அமைப்பு விதிமுறைகளை ஒழுங்குபடுத்த அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கு ஆதரவாக இப்போது Tencent Holdings, NetEase உட்பட 213 நிறுவனங்கள் உறுதி தெரிவித்துள்ளன.

முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீடியோ விளையாட்டுகளை விளையாடும் சிறுவர்களை அடையாளம் காணும் திட்டமும் விதிமுறைகளில் முன்மொழியப்பட்டுள்ளது.

சீனாவில் இளையர்கள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்துவருகிறது. அது குறித்து, சென்ற மாதம், அந்நாட்டு அரசாங்கம் கவலை தெரிவித்திருந்தது.

அதன் பின் அங்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், வாரம் 3 மணி நேரத்திற்கு மேல் வீடியோ விளையாட்டுகளை விளையாடக்கூடாது என்று புதிய விதிமுறை அறிமுகமானது.

இந்நிலையில், அதன் தொடர்பில் மேலும் பல விதிமுறைகள் நடப்புக்கு வரலாம் என்று துறை சார்ந்த நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் அஞ்சுகின்றனர்.

- Reuters/dv 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்