Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் புதிய உயிரிப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றம்

சீனா, புதிய உயிரிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவில் புதிய உயிரிப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றம்

(கோப்புப் படம்: REUTERS/Carlos Garcia Rawlins)

சீனா, புதிய உயிரிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

கிருமிப் பரவல்களைக் கையாளும் முறையை மேம்படுத்துவது, சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி முதலிலேயே தகவல் தருவோரைப் பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

கிருமிப்பரவலைக் கையாளும் முறை, தொடக்கத்தில் அதை மறைக்க முயன்றது உட்பட சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.


இந்நிலையில், உயிரிப் பாதுகாப்புக்கு அபாயமான அம்சங்கள் குறித்து தனிநபர்களோ, அமைப்புகளோ உரிய அமைப்புகளுக்குத் தகவல் கொடுக்கப் புதிய சட்டம் உரிமையளிக்கிறது.

உயிர் ஆபத்து ஏற்படுத்தும் தகவல்களை மறைப்பவர்களையும், மற்றவர்களைப் பாதிக்கும் கிருமித்தொற்றுக் குறித்துப் புகார் செய்யத் தவறுவோரையும் எச்சரிக்கவோ, தற்காலிகப் பணி நீக்கம் செய்யவோ புதிய சட்டம் வகை செய்கிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி புதிய "உயிரிப் பாதுகாப்புச் சட்டம்" நடப்புக்கு வரும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்