Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா , Apple ஒப்பந்தம் - பிரச்சனை எழுமா?

சீன அதிகாரிகள், மேகக் கணிமச் சேவையில் சேகரித்து வைக்கப்படும் தகவல்களை எளிதில் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.   அதற்கு துணைபுரியும் வகையில், ஆப்பிள் நிறுவனம், சீனாவில் புதிய தரவியல் நிலையத்தை, இந்த மாத இறுதிக்குள் தொடங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சீனா , Apple ஒப்பந்தம் - பிரச்சனை எழுமா?

படம்: REUTERS/Aly Song

சீன அதிகாரிகள், மேகக் கணிமச் சேவையில் சேகரித்து வைக்கப்படும் தகவல்களை எளிதில் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.   அதற்கு துணைபுரியும் வகையில், ஆப்பிள் நிறுவனம், சீனாவில் புதிய தரவியல் நிலையத்தை, இந்த மாத இறுதிக்குள் தொடங்கவிருக்கிறது.

ஆனால், அத்தகைய சேவைகள், அரசாங்கத்துடன் முரண்பாடான கருத்துகள் கொண்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தண்டிக்க வகை வழிவகுக்கக்கூடும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர்.  

பத்தண்டுகளுக்கு முன்பு, Yahoo நிறுவனம் அதுபோன்ற சேவையை சீன அரசாங்கத்திற்கு வழங்கி வந்தது.   அப்போது, ஜனநாயகத்திற்கு ஆதரவாகப் பேசிய இருவர் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து Yahoo நிறுவனம், சீன அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. அதன்பின்னர், அந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனைக்கு ஆளானார்கள்.

தற்போது, சீன அரசாங்கம் Apple நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம், முன்பிருந்த பிரச்சனையைக் காட்டிலும் மோசமான பிரச்சனைகளைக் கொண்டு வரக்கூடும் என்று மனித உரிமை ஆர்வலரும், Apple நிறுவனத்தின் பங்குதாரருமான திரு ஜிங் சௌவ் (Jing Zhao) அக்கறை தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்