Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் கரப்பான்பூச்சிகளை வகைவகையாகச் சமைத்து விற்கும் உணவகம்

சீனாவில் பண்ணையாளர் ஒருவர் சுமார் 10 மில்லியன் கரப்பான்பூச்சிகளைப் பண்ணையில் வளர்த்து வருகிறார்.

வாசிப்புநேரம் -
சீனாவில் கரப்பான்பூச்சிகளை வகைவகையாகச் சமைத்து விற்கும் உணவகம்

படம்: AFP/Wang Zhao

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவில் பண்ணையாளர் ஒருவர் சுமார் 10 மில்லியன் கரப்பான்பூச்சிகளைப் பண்ணையில் வளர்த்து வருகிறார்.

சீனாவில் கரப்பான்பூச்சிகள் விலங்குகளுக்குத் தீவனமாகவோ, மருத்துவத்திற்காகவோ வளர்க்கப்படுகின்றன.

ஆனால் இந்தப் பண்ணையிலோ அவை மனிதர்கள் சமைத்து உட்கொள்வதற்காக வளர்க்கப்படுகின்றன.

காரமான சாந்துடன் சேர்த்து கரப்பான் பூச்சிகள் வறுக்கப்படுகின்றன.

கரப்பான்பூச்சிகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப் புண், சுவாசக் கோளாறு முதலியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது சிலரின் நம்பிக்கை.

மனிதர்கள் அந்தப் பூச்சியை உட்கொள்வதால் கரப்பான் பூச்சிகளுக்கு இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி அவர்களுக்கும் வந்து சேர்கிறது என்பது நம்பிக்கை.

சாப்பிட்டுப் பார்க்கும்வரை, கரப்பான் பூச்சி இவ்வளவு ருசிமிக்கது என்பதை யாரும் நம்புவதே இல்லை என்கிறார் பண்ணையாளர்.

பண்ணையில் வளர்க்கப்படும் ஒரு டன் உலர்ந்த கரப்பான்பூச்சிகள் சுமார் 13,500 டாலருக்கு விற்பனையாகின்றன.

இருந்தாலும் கரப்பான்பூச்சிகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்குமாறு பாரம்பரியச் சீன மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்