Images
  • v
    (படம்: AFP/ANDREW CABALLERO-REYNOLDS)

சீனாவில் புதிதாக உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து COVID-19 நோயைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கக்கூடும்

China National Biotec Group (CNBG) என்ற உயிரியல்-தொழில்நுட்ப நிறுவனம், தான் உருவாக்கிய COVID-19 நோய்க்கான தடுப்பு மருந்து பாதுகாப்பானது, ஆற்றல் மிக்கது என்ற நம்பிக்கையை அளிப்பதாகக் கூறியுள்ளது.

தடுப்பூசிச் சோதனையின் முதல், இரண்டாம் கட்டங்களில் CNBG சுமார் 1120 பேருக்குத் அதிகளவிலான புரதங்களை (Antibodies) அது ஊசிமூலம் அளித்தது.

சீனாவிலும் மற்ற நாடுகளிலும், மனிதர்களைக் கொண்டு சுமார் 8 தடுப்பூசி வகைகளைச் சோதிக்கச் சீன ஆய்வுக்குழுக்களும் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிச் சோதனையின் மூன்றாம் கட்டம் வரை சோதிக்கப்படும் தடுப்பூசி செயல்பட்டால் தான் அது மனிதப் பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

CNBG அதன் மூன்றாம் கட்டச் சோதனையை அடுத்ததாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடத்தும் எனத் தெரிவித்தது.
 

Top