Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: உச்சஸ்தாயியில் அமைந்த பாடல்களைத் தொடர்ந்து பாடியதில் நுரையீரல் செயலிழந்த ஆடவர்

சீனாவில் 65 வயது ஆடவர் ஒருவர் நீண்ட நேரம் கரவோக்கே (karaoke) பாடியதில் அவரது நுரையீரல் செயலிழந்தது.

வாசிப்புநேரம் -
சீனா: உச்சஸ்தாயியில் அமைந்த பாடல்களைத் தொடர்ந்து பாடியதில் நுரையீரல் செயலிழந்த ஆடவர்

படம்: AP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவில் 65 வயது ஆடவர் ஒருவர் நீண்ட நேரம் கரவோக்கே (karaoke) பாடியதில் அவரது நுரையீரல் செயலிழந்தது.

ஜியாங்ஸி மாநிலத்தைச் சேர்ந்த வாங், உச்சஸ்தாயியில் (high-pitched ) 10 பாடல்களைத் தொடர்ந்து பாடிய பிறகு நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

இதற்குமுன் பலமுறை அந்தப் பாடல்களைப் பாடியபோதும் ஏதும் நடந்ததில்லை என்று கூறிய அவர், இம்முறை இப்படி ஆனது குறித்து வியப்புத் தெரிவித்தார்.

பாடல்களைப் பாடிமுடித்து வீட்டுக்குப் போனபின் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இடப்பக்க நுரையீரலில் வலியை உணர்ந்ததாகக் கூறினார்.

உச்சஸ்தாயியில் பாட அவர் முயன்றபோது, நுரையீரலில் செலுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக நுரையீரல் கடுமையாய் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அளவிற்கு மீறினால் பாடுவதும் பாடாய்ப் படுத்தும்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்