Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமித்தொற்று குறித்துக் கலந்துபேச, ஒரே மாதத்தில் மூன்றாம் முறை சந்தித்த சீனாவின் முக்கியத் தலைவர்கள்

கிருமித்தொற்று குறித்துக் கலந்துபேச, ஒரே மாதத்தில் மூன்றாம் முறை சந்தித்த சீனாவின் முக்கியத் தலைவர்கள்

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்று குறித்துக் கலந்துபேச, ஒரே மாதத்தில் மூன்றாம் முறை சந்தித்த சீனாவின் முக்கியத் தலைவர்கள்

(Photo: AFP/Noel CELIS)

சீனாவின் முக்கியத் தலைவர்கள், கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாட ஒன்றுகூடியுள்ளனர்.

இதற்கு முன்னர் ஒரே மாதத்தில் அவர்கள் மூன்று முறை சந்தித்தது இல்லை.

சீன அதிபர் சி சின்பிங், கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த சீனா மேற்கொண்டுவரும் முயற்சிகளால் நல்ல முன்னேற்றம் காண்பதாக அவர் கூறினார்.

அத்துடன், பொருளியல் நிலைத்தன்மையைக் கட்டிக்காக்க வர்த்தகத் துறையின் மீதும் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று திரு. சி வலியுறுத்தினார்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஆக எளிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக உள்ளூர் அதிகாரிகளை அவர் கடந்த வாரம் சாடினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்