Images
  • Chinese new year
    படம்: GREG BAKER / AFP

சீனா: சீனப் புத்தாண்டின்போது எல்லைகளைக் கடந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது, சீன எல்லைகளைக் கடந்து சென்றோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு, 11 விழுக்காடு அதிகரித்து சுமார் 12.5 மில்லியனாகப் பதிவானது.

சீனப் பொருளியல் மெதுவடைந்தாலும் சீனச் சுற்றுப்பயணத் துறை வளர்ச்சியடைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

2017ஆம் ஆண்டில் சீனர்கள் 143 மில்லியன் அனைத்துலகச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டனர். அத்தகைய பயணங்களில் சீனர்கள் அதிகப் பணத்தைச் செலவு செய்கின்றனர்.

புத்தாண்டுக் காலத்தின்போது சீனாவில் நீண்ட விடுமுறை வழங்கப்படுகிறது. 

குடும்ப ஒன்றுகூடலுக்காகச் சுமார் 320 மில்லியனுக்கும் அதிகமானோர், அந்தக் காலக்கட்டத்தில் பயணம் மேற்கொள்வர்.


Top