Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனப் புத்தாண்டு விடுமுறைப் பயணங்களைத் தவிர்க்கச் சலுகைகள் வழங்கும் சீனா

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது பொதுமக்கள் மற்ற நகர்களுக்குப் பயணம் செய்யாமலிருக்கச் சீனாவின் நிறுவனங்களும் உள்ளூர் அரசாங்கங்களும் சலுகைகள் வழங்கவுள்ளன.

வாசிப்புநேரம் -

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது பொதுமக்கள் மற்ற நகர்களுக்குப் பயணம் செய்யாமலிருக்கச் சீனாவின் நிறுவனங்களும் உள்ளூர் அரசாங்கங்களும் சலுகைகள் வழங்கவுள்ளன.

அதுபற்றி SCMP செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

கோவிட்-19 நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கவும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் அதிகமானோர் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கத் திட்டமிடப்படுகிறது.

அடுத்த மாதப் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மக்கள் தங்கள் குடும்பங்களைக் காணச் செல்லாமல், வீட்டிலேயே தங்குவதற்கு நிதியும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன என்று SCMP தெரிவித்தது.

பணம், பற்றுச்சீட்டுகள், திரைப்பட நுழைவுச்சீட்டுகள் , உள்ளூரின் கண்கவர் இடங்களுக்கு இலவச நுழைவு, உணவு, அலங்காரங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

சீனாவின் ஆக முக்கியமான விடுமுறைகளில் சீனப் புத்தாண்டும் ஒன்று. 16 நாள்கள் நீடிக்கும் கொண்டாட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி மிக முக்கிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்