Images
  • chris in my
    படம்: AFP

மலேசியாவில் கிறிஸ்துமஸ் அனுபவத்தை வழங்கும் புதுமையான உணவகம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வானைத் தொடும் கட்டடங்களுக்கு இடையே புதியதோர் உணவகம் அறிமுகம் கண்டுள்ளது.

கலைமான்கள் இழுத்துச் செல்லும் சறுக்குவண்டியில் பயணம் செய்யும் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போலவே பறந்துகொண்டே உணவை ருசிக்கலாம்.

நகரில் 45 மீட்டர் உயரத்தில் தொங்குகிறது Santa in the Sky உணவகம்.

பாரந்தூக்கியின் இறுக்கமான பிடியில் உள்ள சறுக்குவண்டிதான் உணவகத்தின் வெளிப்புறம். அதனுள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் உள்ளது. அவரோடு உட்கார்ந்து உணவை உண்ணலாம்.

கிறிஸ்துமஸ் உணர்வோடு உற்றார் உறவினர்களுடன் உணவை ரசிக்கும் புதுமையான அனுபவம், உணவகத்தில் கிடைக்கும்.

இதுவரை அந்தத் தற்காலிக உணவகம் 40 நாடுகளுக்குச் சென்றுள்ளது.
 

Top