Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரில் குடிமக்கள் தற்காப்புப் படை நிலையங்களில் சோதனைகள் தீவிரம்

மியன்மாரில் குடிமக்கள் தற்காப்புப் படை நிலையங்களில் ராணுவம் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

மியன்மாரில் குடிமக்கள் தற்காப்புப் படை நிலையங்களில் ராணுவம் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வடக்கேயுள்ள ஷான் (Shan) மாநிலத்தின் ஒரு சிற்றூரில் கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர்.

பயங்கரவாதக் குழுவினருக்கு விற்பதற்காக ஆயுதங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக ராணுவம் கூறியது.

காயா (Kayah) மாநிலத்தில் சட்ட விரோதமாக இயங்கியதாகச் சொல்லப்படும் மருந்தகத்தில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர்.

அனுமதியின்றி சிகிச்சையளித்ததாக மருத்துவர்கள், தாதியர் என 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சையளித்ததாக ராணுவம் குற்றஞ்சாட்டியது.

மருந்தகத்தில் ராணுவத்தினர் நுழைந்தபோது அங்கே 48 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பொறுப்பிலிருந்து அகற்றப்பட்ட மியன்மார் முன்னாள் அரசாங்கத்தின் நிதியமைச்சர் Thaung Tun (தோங் டூன்) மீது ராணுவம், ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

அரசாங்க நிலத்தைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடும்போது சலுகையளித்தாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்