Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: சீனப் புத்தாண்டு அன்று நடந்த தாக்குதல்களில் 15 பேர் மாண்டனர்

சீனாவில் சீனப் புத்தாண்டு அன்று நடந்த இருவேறு தாக்குதல்களில் 15 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
சீனா: சீனப் புத்தாண்டு அன்று நடந்த தாக்குதல்களில் 15 பேர் மாண்டனர்

படம்: AFP

சீனாவில் சீனப் புத்தாண்டு அன்று நடந்த இருவேறு தாக்குதல்களில் 15 பேர் மாண்டனர்.

கடந்த திங்கள் கிழமை இரவு சான்ஷி (Shaanxi) மாநிலத்தில் ஆடவர் ஒருவர் தமது சகோதரரின் வீட்டிற்குத் தீ வைத்தார்.

அதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் மாண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிறகு, தீ வைத்த ஆடவர் தற்கொலை செய்ய முயன்ற போது காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதே இரவு கான்ஷு (Gansu) மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட 49 வயது ஆடவர், தம் கிராமத்தில் உள்ளவர்களைக் கத்தியால் தாக்கினார்.

அதில் 8 பேர் மாண்டதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர். அந்த ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சீனாவில் கத்திக் குத்துச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதுண்டு.

சீனாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகரிப்பதால் வன்முறை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்