Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது சொந்த ஊருக்குத் திரும்பாதீர்கள்!: ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் சீனா

சீனாவில் எதிர்வரும் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று உள்ளூர் அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

வாசிப்புநேரம் -
சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது சொந்த ஊருக்குத் திரும்பாதீர்கள்!: ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் சீனா

(படம்: AFP/Greg Baker)

சீனாவில் எதிர்வரும் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று உள்ளூர் அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஊழியர்கள், சொந்த ஊர் செல்லாமலிருக்கக் கூடுதல் சலுகைகளை வழங்க மாநில அரசாங்கங்களும், நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

அடுத்த மாதம், சீனப் புத்தாண்டின்போது ஊழியர்கள் 280 மில்லியனுக்கும் அதிகமானோர், தங்கள் குடும்பத்தினரைக் காணப் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாகப் புத்தாண்டின்போது வேலை செய்வோருக்குக் கூடுதல் சம்பளம் கொடுக்கப்படும்.

ஆனால் இம்முறை, இன்னும் அதிகமானோர் அந்த சலுகைகளை ஏற்றுக்கொள்வர் என்று உள்ளூர் அரசாங்கங்களும், நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன.

ஊழியர்கள் பயணங்களைத் தவிர்த்தால், நாட்டில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும்;
தொழில்துறை, விநியோக முறைகளின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய முடியும் என்றும்
மாநில அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்