Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: அம்பால் தாக்கப்பட்ட நாகப் பாம்பிற்கு மறுவாழ்வு

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் அம்பால் தாக்கப்பட்ட நாகப் பாம்பிற்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் அம்பால் தாக்கப்பட்ட நாகப் பாம்பிற்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது.

பூரி நகரவாசிகள் அந்தப் பாம்பின் உடலில் இரும்பு அம்பைப் பாய்ச்சினர்.

ஆனால் அவர்களே பின்னர் அந்தப் பாம்பைக் காப்பாற்றினர்.

பாம்பைத் தாக்கியவர்கள் அது காயமுற்றதாக பாம்பு உதவி மையம் ஒன்றிடம் தெரிவித்தனர்.

பாம்பின் உடலில் பாய்ச்சப்பட்ட அம்பு அதன் நுரையீரல்களைப் பாதித்தது.

அதன் உடலிலிருந்து அம்பை அகற்றினர் கால்நடை மருத்துவர்கள்.

கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் பாம்பின் உடல்நிலை சீராக உள்ளதாய் கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகை நாகப் பாம்பு இந்தியா, இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.

இந்தியாவில் அது பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்