Images
  • cocaine
    (படம்: AFP/Filippo MONTEFORTE)

ஜப்பானில் 400 கிலோகிராம் கொக்கேன் பறிமுதல்

ஜப்பானில் இதுவரை இல்லாத அளவாக 400 கிலோகிராம் கொக்கேன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

73 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த கொக்கேனைக் கோபே (Kobe) நகரத் துறைமுகத்தில் அதிகாரிகள், கடந்த மாதம் பறிமுதல் செய்தனர்.
ஆனால் அது குறித்து இன்றுதான் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் எங்கிருந்து ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. ஆனால் அது Kobe-க்குத் தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று உள்நாட்டு ஊடகம் தெரிவித்தது.

இதற்கு முன் ஜப்பானில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக அளவு கொக்கேன் 177கிலோகிராம். அது ஆகஸ்ட் மாதம் ஐசி (Aichi) வட்டாரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜப்பானிய இளையர்கள் இடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இவ்வளவு பெரிய அளவில் கொக்கேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Top