Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கொரோனா (Corona) கிருமி பரவி வருவதை அடுத்து, அவசரக் கூட்டம்

சீனாவின் வூஹான் (Wuhan) நகரில் கொரோனா (Corona) வகைக் கிருமி பரவி வருவதை அடுத்து,அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உலகச் சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
கொரோனா (Corona) கிருமி பரவி வருவதை அடுத்து, அவசரக் கூட்டம்

(படம்: AFP/STR)

சீனாவின் வூஹான் (Wuhan) நகரில் கொரோனா (Corona) வகைக் கிருமி பரவி வருவதை அடுத்து,அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உலகச் சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.

தற்போது தாய்லந்தில் ஒரு பெண், கொரோனா வகைக் கிருமியால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்த அமைப்பு, அவ்வாறு தெரிவித்தது.

வூஹான் நகரிலுள்ள கடலுணவுச் சந்தையிலிருந்து புதிய வகைக் கிருமி பரவியிருக்கக்கூடும் என்ற உலகச் சுகாதார அமைப்பு, அது மற்ற நாடுகளுக்குப் பரவியதில் ஆச்சரியமில்லை என்றது.

கொரோனா வகைக் கிருமியால் இதுவரை ஒருவர் மாண்டதோடு சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கிருமி, SARS நோய்க்குக் காரணமான கிருமி வகையைச் சேர்ந்தது என்று சீனா கூறுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்