Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: பொது நீரூற்றில் கட்டி அணைத்துக் குளித்த இருவர்-காவல்துறை விசாரணை

மலேசியாவின் சபா மாநிலத்தில் பொது நீரூற்று ஒன்றில் இருவர் கட்டி அணைத்துக்கொண்டு குளிக்கும் நிழற்படம் பரவத் தொடங்கியதை அடுத்து மலேசியக் காவல்துறை அதனை விசாரிக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா: பொது நீரூற்றில் கட்டி அணைத்துக் குளித்த இருவர்-காவல்துறை விசாரணை

(படம்: CNA)

மலேசியாவின் சபா மாநிலத்தில் பொது நீரூற்று ஒன்றில் இருவர் கட்டி அணைத்துக்கொண்டு குளிக்கும் நிழற்படம் பரவத் தொடங்கியதை அடுத்து மலேசியக் காவல்துறை அதனை விசாரிக்கவுள்ளது.

செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் தீப்போல் பரவத் தொடங்கிய நிழற்படம், ஆடவரும் பெண்ணும் கோத்தா கினபாலு நகரத்தில் நிர்வாணமாகக் குளிப்பதைக் காட்டுகிறது.

நீரூற்றுக்கு அருகே அவர்களின் ஆடைகள் தரையில் இருப்பது போல் உள்ளது.

சுற்றுப்பயணிகள் திரளாக வரும் இடம் என்ற நற்பெயரை இந்தச் சம்பவம் களங்கப்படுத்தியுள்ளதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.

இருவரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். ஆனால், நிழற்படத்தைக் கண்டு அதைச் சொல்லிவிடமுடியாது என்று தலைமைக் காவல்துறை அதிகாரி ஹபிபி மஜிஞ்சி கூறினார்.

தடயங்கள் இருந்தால் மட்டுமே விசாரணை தொடரும் என்றார் அவர்.

எனினும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள அதிகாரிகள் முயற்சிசெய்வர் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்