Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19 கிருமிப்பரவலால் அதிகரித்துள்ள வேலைப் பளுவைச் சமாளிக்கமுடியாமல் உதவி கோரியுள்ள சீனத் தாதிகள்

COVID-19 கிருமிப் பரவலால் அதிகரித்துள்ள வேலைப் பளுவைச் சமாளிக்கமுடியாமல் உலக மருத்துவ ஊழியர்களிடம் உதவி கோரியுள்ளனர் சீனத் தாதிகள் இருவர்.

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமிப்பரவலால் அதிகரித்துள்ள வேலைப் பளுவைச் சமாளிக்கமுடியாமல் உதவி கோரியுள்ள சீனத் தாதிகள்

(படம்: Noel Celis/Pool via REUTERS)

COVID-19 கிருமிப் பரவலால் அதிகரித்துள்ள வேலைப் பளுவைச் சமாளிக்கமுடியாமல் உலக மருத்துவ ஊழியர்களிடம் உதவி கோரியுள்ளனர் சீனத் தாதிகள் இருவர்.

தாதிகளின் கடிதம் Lancet எனும் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

குவாங்டொங் வட்டாரத்திலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் அந்தத் தாதிகள் ஜனவரி 24 அன்று வூஹான் சென்றனர்.

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கான பகுதியில் பணியைத் தொடங்கினர்.

வூஹானில் நிலைமை மோசமாக இருப்பதாகவும், நினைத்துப் பார்க்க இயலாத அளவு அது மோசம் என்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கிருமித்தொற்று குறித்த தகவல்களைச் சீனா கடுமையாக கண்காணித்துவருகிறது.

இந்நிலையில், தாதிகள் ஏன் அந்த சஞ்சிகையின் வழி உதவியை நாடினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்