Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள்

மலேசியாவில் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் வலம் வருகின்றன. 

வாசிப்புநேரம் -

மலேசியாவில் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் வலம் வருகின்றன.

வரும் மாதங்களில் தடுப்பூசி போடும் சேவைகளை 40 வாகனங்கள் வழங்கவிருக்கின்றன.

கொரோனா கிருமிப்பரவலைச் சமாளிக்க மலேசியா மேற்கொண்டுள்ள பல்வேறு வழிகளில் அதுவும் ஒன்று.

தடுப்பூசி நிலையங்களுக்குச் செல்லச் சிரமப்படுவோருக்கு, அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கே தடுப்புசி நிலையத்தைக் கொண்டுசெல்வது அரசாங்கத்தின் நோக்கம்.

"இதனால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதன்மூலம் கிருமிபரவும் ஆபத்து மிகவும் குறைகிறது" என்று கோலாலம்பூரின் திரு புகனேசன் திருச்செல்வன் கூறினார்.

அத்தகைய சேவையைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கானோரில் அவரும் ஒருவர்.

நோய்ப்பரவலைத் தடுக்க இம்மாதம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது மலேசியா.

மாநிலங்களுக்கு இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மலேசியாவின் 32 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 2.5 மில்லியன் பேர், குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டுள்ளனர்.

அங்கு 627,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

3,500க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்.


-REUTERS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்