Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பேங்காக்கில் மீண்டும் கிருமித்தொற்று - மூடப்படும் கேளிக்கை விடுதிகள்

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் மீண்டும் கிருமிப்பரவல் தலைதூக்கியிருப்பதைத் தொடர்ந்து சுமார் 200 இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
பேங்காக்கில் மீண்டும் கிருமித்தொற்று - மூடப்படும் கேளிக்கை விடுதிகள்

(படம்: Reuters/Soe Zeya Tun)

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் மீண்டும் கிருமிப்பரவல் தலைதூக்கியிருப்பதைத் தொடர்ந்து சுமார் 200 இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

அவற்றில் 87 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களில் பாதிப் பேருக்கும் மேல், தோங் லோர் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிகளுடன் தொடர்புடையவர்கள்.

பாதிக்கப்பட்ட வர்த்தகங்களை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அவற்றில் பணிபுரியும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படுவர்.

இரவு விடுதிகளும் மதுபானக் கூடங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்கின்றனவா என்பது குறித்து தாய்லந்துக் காவல்துறை விசாரித்து வருகிறது.

அந்தப் பகுதியில் நோய்ப்பரவல் மோசமடைந்தால், அனைத்துக் கேளிக்கை விடுதிகளும் மூடப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வரும் வாரயிறுதியில் தாய்லந்தில் சோங்க்ரான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெறும்.

அதை முன்னிட்டு, கேளிக்கை விடுதிகளைத் தவறாமல் சோதனையிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்