Images
  • birthday
    (படம்: Pixabay)

COVID-19 கிருமித்தொற்றினால் ரத்துசெய்யப்பட்ட பிறந்தநாள் விருந்து - தீக்குளிக்க முயன்ற ஆடவர்

COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பிறந்தநாள் விருந்து ஒன்றை அதிகாரிகள் ரத்துசெய்ததால் ஆடவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

சீனாவின் சோங்சிங் பகுதியில் அந்த 59 வயது ஆடவர் சுமார் 100 பேருடன் பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டார்.

பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளை சீன அரசாங்கம் கட்டுப்படுத்தியதால், ஆடவரின் விருந்தும் ரத்துசெய்யப்பட்டது.

ஆடவர் இடுப்பில் பட்டாசு வெடிகளைக் கட்டி, தம்மீது பெட்ரோல் ஊற்றி தம்மை எரித்துக்கொள்வதாய் ஊர்மக்களை மிரட்டினார்.

ஆடவர்மீது ஊர்தலைவர்கள் பின்னர் புகார்செய்தனர்.

COVID-19 கிருமித்தொற்றால் உணவகங்களில், விருந்துகளும், குழுவாகச் சேர்ந்து உணவருந்துவதையும் அரசாங்கம் கடந்த வாரம் தடைசெய்தது. 

Top