Images
  • Taiwan Corona
    (படம்: REUTERS/Aly Song)

தைவானில், 12-ஆவது நாளாக எந்தவொரு கிருமித்தொற்றுச் சம்பவமும் பதிவாகவில்லை

தைவானில், தொடர்ந்து 12-ஆவது நாளாக எந்தவொரு கிருமித்தொற்றுச் சம்பவமும் பதிவாகவில்லை.

37-ஆவது நாளாக உள்ளூரில் கிருமித்தொற்றுச் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.

கிருமிப் பரவலை, தைவான் மிகச் சிறப்பாகக் கையாண்டுவரும் வேளையில், தைவானிய அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) இன்று அதிபர் பதவியின் இரண்டாம் தவணைக் காலத்துக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய திருவாட்டி சாய், சீனாவும் தைவானும் தங்களது மக்களுக்குக் கடமைப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

இருதரப்பும் வேறுபாடுகளைக் களைந்து, ஒன்று மற்றொன்றுடன் சுமுகமாய்ச் செயல்படுவதற்கான வழிகளை ஆராயவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான சிக்கலான, மாறிவரும் சூழ்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தைவானிய நீரிணையில் நிலைத்தன்மை நீடிப்பதை அவர் சுட்டினார்.

அமைதி, சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்திய திருவாட்டி சாய் சீனாவுடன் பேச்சு நடத்த விரும்புவதாகக் கூறினார்.

ஆனால், பெய்ச்சிங்கின் "ஒரு நாடு- இரண்டு ஆட்சிமுறை" என்னும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.

இதற்கிடையே, உலகச் சுகாதாரப் பொதுச் சபைக் கூட்டத்தில் தைவான் கலந்துகொள்வதற்கு, சீனா தடை விதித்ததுபற்றி திருவாட்டி சாய் தமது உரையில் ஏதும் குறிப்பிடவில்லை. 

Top