Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: பேங்காங் கேளிக்கை விடுதிகளை மூடுவது குறித்து தாய்லந்துச் சுகாதார அதிகாரிகள் பரிசீலனை

பேங்காங்கிலுள்ள கேளிக்கை விடுதிகளை மூடுவது குறித்து, தாய்லந்தின் சுகாதார அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -

பேங்காங்கிலுள்ள கேளிக்கை விடுதிகளை மூடுவது குறித்து, தாய்லந்தின் சுகாதார அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

தலைநகரிலுள்ள இரவு விடுதிகள், தெற்கில் உள்ள ஒரு சிறைச்சாலை ஆகியவற்றில், COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

194 பேரிடம், புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக COVID-19 நிர்வாக நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பெரும்பாலான சம்பவங்கள், பேங்காங்கின் கேளிக்கை விடுதிகளிலும், Narathiwat சிறைச்சாலையிலும் கண்டறியப்பட்டன.

தாய்லந்தில் 29,321 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மாண்டோரின் எண்ணிக்கை 95-ஆக உள்ளது.

பாதிக்கப்பட்ட கேளிக்கை விடுதிகளைக் கிருமிநீக்கம் செய்யப்படும்வரை மூடிவைக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.

கிருமி பரவுவதைத் தடுக்க, பேங்காங் கேளிக்கை விடுதிகளை இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடுவதுபற்றி ஆலோசித்து வருவதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

- AP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்