Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கிழக்காசியாவிலேயே பிலிப்பீன்ஸில் ஒரே நாளில் ஆக அதிகமானோர் கிருமித்தொற்றால் மாண்டனர்

தென்கிழக்காசியாவில் ஆக அதிகமாக, பிலிப்பீன்ஸில் ஒரே நாளில் 186 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். அதனால் அங்கு மாண்டோர் எண்ணிக்கை 4,292க்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியாவிலேயே பிலிப்பீன்ஸில் ஒரே நாளில் ஆக அதிகமானோர் கிருமித்தொற்றால் மாண்டனர்

(கோப்புப் படம்: REUTERS / Eloisa Lopez)

தென்கிழக்காசியாவில் ஆக அதிகமாக, பிலிப்பீன்ஸில் ஒரே நாளில் 186 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். அதனால் அங்கு மாண்டோர் எண்ணிக்கை 4,292க்கு உயர்ந்துள்ளது.

புதிதாக 4,935 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அவர்களையும் சேர்த்து பிலிப்பீன்ஸில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 257,863.

தென்கிழக்காசிய வட்டாரத்தில் பிலிப்பீன்ஸ்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளையிலிருந்து அங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

நிலம், கடல், ஆகாயப் போக்குவரத்துகளில், பயணிகளுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி முக்கால் மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னர், அந்த இடைவெளி ஒரு மீட்டர் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்