Images
  • Ducati Diavel
    விபத்துக்குள்ளான Ducati Diavel வகை மோட்டார்சைக்கிள். (படம்: AFP)

மாடுகள் முட்டியதால் நினைவிழந்து போன மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்

திரங்கானு : மலேசியாவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆடவரை மாட்டுக் கூட்டம் முட்டிச் சாய்த்தது. அதில் 49 வயது ஆடவர்அன்வார் அப்துல் ரஹிம் நினைவிழந்து போனார். அவருக்குத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாடு முட்டிய அன்வார், தம் நண்பர்களுடன் 20 மோட்டார் சைக்கிள்களுடன் அணி வகுத்துச் சென்றார். அப்போது சுமார் முப்பது மாடுகள் திடீரென்று சாலையின் குறுக்கே புகுந்தன. அதனால், அன்வார் தம் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.

அன்வாரின் மனைவி, அவருக்கு 10 மீட்டர் முன்னால் தம் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடைய காலிலும் ஒரு மாடு மிதித்தது. இருப்பினும் அவர் தம்முடைய வாகனத்தின் கட்டுபாட்டை இழக்காமல் தப்பினார்.

இருவரும் மோட்டார்சைக்கிள் அணிவகுப்பின் பின்னால் சென்றுகொண்டிருந்ததாகவும் சாலையோரம் நின்று கொண்டிருந்த மாடுகள் எந்த அறிகுறியுமில்லாமல் சாலையைக் கடந்ததாகவும் அன்வாரின் மனைவி கூறினார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அன்வார் நினைவிழந்த நிலையில் உள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் தம்பதி விபத்தில் சிக்கியது இதுவே முதல் முறை.

 

Top