Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: உயிர் காக்க முனைந்த 'வெள்ளை தேவதை'

மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு வந்து விழுந்த ஆடவருக்கு முதல் உதவி செய்த மருத்துவ மாணவிக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

வாசிப்புநேரம் -
மலேசியா: உயிர் காக்க முனைந்த 'வெள்ளை தேவதை'

படம்: Pixabay

மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு வந்து விழுந்த ஆடவருக்கு முதல் உதவி செய்த மருத்துவ மாணவிக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

அந்த 44 வயது ஆடவர் நினைவிழந்த நிலைக்குச் சென்றதாக மலேசியாவின் சீன மொழி ஊடகங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்திற்கு முதலுதவிச் சேவை வாகனம் வருவதற்கு முன், அருகில் இருந்த அந்த இளம் பெண் உடனடியாக அவருக்கு முதல் உதவி அளித்தார்.

அந்த மருத்துவ மாணவியின் துணிச்சலான செயலுக்கு இணையவாசிகளும் பொதுமக்களும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

பலரும் அவர் ஒரு 'வெள்ளை தேவதை' என்றும், கண்டிப்பாக எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராக விளங்குவார் என்றும் மாணவியை வாழ்த்தினர்.

அந்த ஆடவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்