Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இக்கட்டான சூழல், திருமணப் படப்பிடிப்பு இடமாக மாறியது

துன்பத்திலும் இன்பம் இருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்....அது மலேசியாவின் பஹாங்கைச் சேர்ந்த புதுமணத் தம்பதிக்குப் பொருத்தமாக அமைந்தது.

வாசிப்புநேரம் -
இக்கட்டான சூழல், திருமணப் படப்பிடிப்பு இடமாக மாறியது

(படம்: apihazmi/Twitter)

துன்பத்திலும் இன்பம் இருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்....அது மலேசியாவின் பஹாங்கைச் சேர்ந்த புதுமணத் தம்பதிக்குப் பொருத்தமாக அமைந்தது.

புதுமணத் தம்பதி காரில் அவர்களது திருமணப் படப்பிடிப்புக்காகக் கடற்கரைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கோளாறு காரணமாகக் கார் பாதிவழியில் நின்றது.

படப்பிடிப்பு நடக்காமல் போய்விடுமோ என்று முகங்கள் சோகத்தில் சோர்ந்தபோது, நிழற்படக் கலைஞர் கார் நின்ற சாலையைப் படப்பிடிப்பு இடமாக மாற்றினார்.

பிறகு என்ன? புதுமணத் தம்பதியின் படங்களுக்கும் நிழற்படக் கலைஞருக்கும் இணையவாசிகளின் புகழ் மழைதான்.

ஆனால் சாலையில் சென்றவர்கள் புதுமணத் தம்பதி வேண்டுமென்றே காரைச் சாலையில் நிறுத்திப் படமெடுக்கிறார்கள் என்று முணுமுணுத்ததாக நிழற்படக் கலைஞர் கூறினார்.

பிறகு சிறிதுநேரத்தில் புதுமணத் தம்பதி அவர்கள் ஆசைப்பட்ட கடற்கரைக்குச் சென்று படங்கள் எடுத்தனர்.

Twitter-இல் தம்பதியின் படம் 8,000 முறைக்கு மேல் பகிரப்பட்டது, 14,000 முறைக்கு மேல் Like செய்யப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்