Images
  • Ismail Sabri Yaakob
    (படம்: Bernama)

அரச மலேசியக் கடற்படைக் கப்பலில் சுமார் 100 கடலோடிகளுக்குக் கிருமித்தொற்று

அரச மலேசியக் கடற்படைக் கப்பலைச் சேர்ந்த சுமார் 100 கடலோடிகளுக்குக் கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது.

கப்பலில் ஏறுவதற்கு முன், அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

பிறகு எவ்வாறு கடலோடிகளுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மலேசியாவின் மூத்த தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட 10 நாள்களுக்குப் பிறகு அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியானால் அவர்கள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மலேசியாவில் புதிதாக சுமார் 5,500 சம்பவங்கள் உறுதியாயின.

ராணுவ அதிகாரிகள், அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்குத் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய, முயற்சிகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் இஸ்மாயில் கூறினார்.

அதன்மூலம், கூட்டுத் தடுப்பாற்றலை வேகமாக எட்ட முடியும் என்றார் அவர். 

Top