Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டிருந்த முக்கிய சாலை இணைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டிருந்த, முக்கிய சாலை இணைப்பு ஒன்று, இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டிருந்த முக்கிய சாலை இணைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

(படம்: AFP/Dale De La Rey)

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டிருந்த, முக்கிய சாலை இணைப்பு ஒன்று, இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கவ்லூனையும் (Kowloon) ஹாங்காங் தீவையும் இணைக்கும் குரோஸ் ஹார்பர் (Cross Harbour) சுரங்கப் பாதை வழக்கநிலைக்குத் திரும்பியிருக்கிறது.

அந்நகரில் ஆக அதிகம் பயன்படுத்தப்படும் சுரங்கப் பாதை அது.

அங்கு நேர்ந்த ஆர்ப்பாட்டங்களால் கடந்த இரண்டு வாரங்களாக அது மூடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் தடுப்புகளை இட்டு, சில பகுதிகளுக்குத் தீ வைத்தனர்.

நகரின் போக்குவரத்து முறையைச் சீர்குலைப்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.

சுரங்கத்தைச் சீரமைக்கும் பணியில் சுமார் 800 ஊழியர்கள் பல ஆயிரம் மணிநேரம் அயராது பாடுபட்டதாக ஹாங்காங் அரசாங்கம் தெரிவித்தது.

பலத்த பாதுகாப்புடன் சுரங்கப் பாதை மீண்டும் செயல்படுகிறது.

சுரங்கப் பாதையின் இரு முனைகளிலும் போக்குவரத்துக் காவல்துறை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், அவசர மருத்துவ உதவி வாகனங்கள் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்