Images
  • japan
    படம்: AFP

Diamond Princess சொகுசுக் கப்பலில் மேலும் 39 பேருக்குப் கொரோனா கிருமித்தொற்று

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் மேலும் 39 பேருக்குக் கொரோனா கிருமி தொற்றியுள்ளது.

அவர்களையும் சேர்த்து, அந்தக் கப்பலில் 174 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில் நால்வர், மோசமான நிலையில் உள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஹாங்காங்கில் இறங்கிய கப்பல் பயணிக்குக் கிருமி தொற்றியது.

அதனால், கப்பல் கடந்த வாரத்திலிருந்து ஜப்பான் கரையோரத்தில் தனிமைப்படுத்தப்பட்டது.

வரும் 19-ஆம் தேதி வரை அந்தக் கப்பல் தனிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Top