Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நியூசிலந்து: கிட்டா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,000 பேர் பாதிப்பு

நியூசிலந்தின் தெற்குப் பகுதியில் வசிக்கும் குறைந்தது 5,000 பேர் கிட்டா (Gita) சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
நியூசிலந்து: கிட்டா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,000 பேர் பாதிப்பு

படம்: John PULU/AFP

நியூசிலந்தின் தெற்குப் பகுதியில் வசிக்கும் குறைந்தது 5,000 பேர் கிட்டா (Gita) சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 1,000 சுற்றுப்பயணிகள் அங்கு சிக்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சூறாவளியால் கன மழை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தின் பல நகரங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரைஸ்ட்சர்ச் (Christchurch) உள்ளிட்ட நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

சூறாவளியின் தாக்கம் இனி குறையும் என வானிலை ஆய்வகத்தார் கூறியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்