Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கழிவறையைக் கட்டிக்கொடுப்பதாகக் கூறி ஏமாற்றிய தந்தையைக் காவல்துறையிடம் அழைத்துச் சென்ற மகள்

தனது 7 வயது பிள்ளைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போன தந்தை, காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட கதை இது...

வாசிப்புநேரம் -
கழிவறையைக் கட்டிக்கொடுப்பதாகக் கூறி ஏமாற்றிய தந்தையைக் காவல்துறையிடம் அழைத்துச் சென்ற மகள்

(படம்: REUTERS/Adnan Abidi/File Photo)

தனது 7 வயது பிள்ளைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போன தந்தை, காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட கதை இது...

கழிவறையைக் கட்டிக்கொடுப்பதாகக் கூறி தன் தந்தை ஏமாற்றியதாக 7 வயது ஹனிஃபா சாரா (Hanifa Zaara) இந்தியக் காவல்துறைக்குக் கடிதம் எழுதினார்.

வெளிப்புறத்தில் கழிவறைக்குப் போகக் கூச்சமாக இருப்பதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டின் ஆம்பூர் நகரில் தனது பெற்றோருடன் வசிக்கும் ஹனிஃபாவின் வீட்டில் கழிவறை வசதிகள் இல்லை.

அண்டைவீட்டார் சிலருக்குக் கழிவறை வசதியிருப்பதைப் பார்த்த சிறுமி, தன் தந்தையிடம் கழிவறை ஒன்றைக் கட்டித்தரும்படி கேட்டிருக்கிறார்.

வகுப்பில் முதல் மாணவியாக வந்தால், கழிவறையை அமைத்துக்கொடுப்பதாக தந்தை எசானுல்லா (Ehsanullah) வாக்குறுதி அளித்திருக்கிறார்.

தான் பாலர் பள்ளியிலிருந்து முதல் மாணவியாக வருவதாகவும், தந்தை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருப்பதாகவும் கூறிய சிறுமி, தந்தையைக் கைதுசெய்யும்படி காவல் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாள்.

வசதியில்லாத காரணத்தால் கழிவறையைக் கட்டி முடிக்க இயலவில்லை என்று திரு எசானுல்லா BBC செய்தியிடம் கூறினார்.

இந்தியாவில் வசிக்கும் பலருக்குக் கழிவறை வசதிகள் இல்லை.
சுமார் 500 மில்லியன் பேர் வெளிப்புறத்தில் கழிவறைக்குச் செல்வதாக ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி கூறியுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்