Images
  • Dalai Lama
    (படம்: AFP/Robin Utrecht) 

பௌத்த சமயப் போதகர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது பற்றி 1990களிலேயே அறிவேன்: தலாய் லாமா


பௌத்த சமயப் போதகர்கள் சிலர் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்துத் தாம் 90களிலிலேயே அறிந்ததாகவும் இத்தகைய குற்றச்சாட்டுகள் புதிதல்ல என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.

நான்கு நாள் நெதர்லந்துப் பயணத்தின்போது அவர் அவ்வாறு கூறினார்.

பௌத்த சமயப் போதகர்களால் பாதிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மக்களை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) அன்று தலாய் லாமா சந்தித்தார்.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் புத்தரின் போதனைகளை அலட்சியப்படுத்துகிறார்கள். இப்பொழுது அனைத்தும் பொதுப்படையாக பேசப்பட்டு வரும் வேளையில் அத்தகையோர் அவமானமடைவது குறித்துக் கவலைப்படக்கூடும் என்றார் அவர்.

வரும் நவம்பர் மாதம் திபெத்தின் (Tibet) சமயத் தலைவர்கள் தர்மஷாலாவில் ஒன்றுகூட உள்ளனர். அப்போது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கலந்துரையாடப்பட வேண்டும் என்று தலாய் லாமா கூறினார்.
 

Top