Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை: 42 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மரணதண்டனை

இலங்கை அரசாங்கம் மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தவிருக்கிறது.  

வாசிப்புநேரம் -
இலங்கை: 42 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மரணதண்டனை

(படம்: AFP)

இலங்கை அரசாங்கம் மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தவிருக்கிறது.

அதிபர் மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena), போதைப்பொருள் குற்றங்களைப் புரிவோருக்கு மரணதண்டனை இன்னும் இரண்டு மாதத்தில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா, வட கொரியா, சீனா, சிங்கப்பூர் முதலிய நாடுகள் போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து வருகிறது. அவற்றுடன் இப்போது இலங்கையும் சேர்ந்துகொள்ளவிருக்கிறது.

தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிவோரின் மரணதண்டையை நிறைவேற்றுவதற்குரிய ஆணையில் கையெழுத்திட தாம் தயார் என்று நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் சிறிசேன தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றவாளிகளைக் கையாளுவதில் பிலிப்பீன்ஸ் மேற்கொண்டு வரும் நடைமுறையைப் பின்பற்ற இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்