Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 200க்கு மேல் அதிகரிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட 8 வெடிகுண்டுத் தாக்குதல்களில் 207 பேர் பலியானதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசிப்புநேரம் -
இலங்கை குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 200க்கு மேல் அதிகரிப்பு

படம் : Facebook@sebastianchurch150

இலங்கையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட 8 வெடிகுண்டுத் தாக்குதல்களில் 207 பேர் பலியானதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாண்ட 207 பேரில் 35 பேர் வெளிநாட்டினர் என்றும், கிட்டத்தட்ட 450 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தினமான இன்று சொகுசு ஹோட்டல்களையும், தேவாலயங்களையும் இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இன்று நடந்த 8ஆவது வெடிகுண்டுத் தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மற்ற தாக்குதல்களும் தற்கொலைத் வெடிகுண்டுத் தாக்குதல்களா? என்ற விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

தலைநகர் கொழும்பிலுள்ள செயிண்ட் அந்தோணி தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 160 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சமூக ஊடகங்களும், குறுஞ்செய்திச் சேவைகளும், முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்