Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிளாஸ்டிக் பைகளை உண்டு 9 மான்கள் மரணம்

ஜப்பானின் நாரா (Nara) விலங்குத் தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை உண்டு 9 மான்கள் மாண்டதாக வனவிலங்குக் குழு தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

ஜப்பானின் நாரா (Nara) விலங்குத் தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை உண்டு 9 மான்கள் மாண்டதாக வனவிலங்குக் குழு தெரிவித்திருக்கிறது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அது குறைகூறியது.

மாண்ட மான்களின் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில் ஒரு மானின் வயிற்றில் மட்டும் 4.3 கிலோகிராம் பிளாஸ்டிக் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த 4 மாதங்களில் நாரா (Nara) விலங்குத் தோட்டத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகளும் குப்பைகளும் நிரம்பத் தொடங்கின.

அது மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகள் கொடுக்கும் தீனியைத் தின்று சுவைகண்ட மான்கள் அவற்றைத் தேடி வீதிகளுக்கு வந்து, கண்ணில் படுவதையெல்லாம் உண்பதாகக் கூறப்பட்டது.

மான்களுக்குத் தீனி கொடுப்பதைச் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்