Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சபா மாநிலத்தின் கிமானிஸ் தொகுதி இடைத்தேர்தல் வாக்களிப்பு நிறைவு

மலேசியாவின் சபா மாநிலத்தில் கிமானிஸ் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சபா மாநிலத்தின் கிமானிஸ் தொகுதி இடைத்தேர்தல் வாக்களிப்பு நிறைவு

(படம்: Bernama)

மலேசியாவின் சபா மாநிலத்தில் கிமானிஸ் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியில் உள்ள வரிசான் சபாவுக்கும்,
முன்னாள் ஆளும் கூட்டணியான தேசிய முன்னணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

2018ஆம் ஆண்டில் முறையான தேர்தல் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதனால் கிமானிஸ் தொகுதியின் முடிவுகள் செல்லுபடியாகாது என்றும் மலேசிய நீதிமன்றம் கூறியிருந்தது.

இன்றைய தேர்தலில் சுமார் 30,000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆக அண்மைய நிலவரப்படி 76 விழுக்காட்டுக்கும் மேலான வாக்காளர்கள் வாக்களித்துவிட்டதாய்த் தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி, Malaysiakini இணையப்பக்கம் தெரிவித்தது.
 
கிமானிஸ் தொகுதியில் வாக்களிப்பு செயல்முறை சுமுகமாக நடப்பது மகிழ்ச்சியளிப்பதாக் சபா முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்