Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியத் தலைநகர் புதுடில்லி இன்றிரவு முதல் ஒரு வாரத்திற்கு முடக்கம்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்றிரவு முதல், ஒரு வாரத்திற்கு முடக்க நிலை நடப்புக்கு வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
இந்தியத் தலைநகர் புதுடில்லி இன்றிரவு முதல் ஒரு வாரத்திற்கு முடக்கம்

படம்: REUTERS

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்றிரவு முதல், ஒரு வாரத்திற்கு முடக்க நிலை நடப்புக்கு வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா கிருமி கடுமையாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

COVID-19 சூழ்நிலை, நெருக்கடி மிக்கதாய் உள்ளதாகப் புதுடில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜிரிவால் (Arvind Kejriwal) கூறினார்.

முடக்க நிலை, கிருமித்தொற்றை முடிவுக்குக் கொண்டு வராது. ஆனால், அதை மெதுவடையச் செய்யும் என்று அவர் கூறினார்.

முடக்க நிலை நடப்பில் உள்ள ஒரு வாரத்தில், சுகாதாரப் பராமரிப்புச்சேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வேண்டிய படுக்கைகளுக்கும், பிராணவாயுக் கலங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று இந்தியாவில், சுமார் 274,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்தாற்போல் ஐந்தாவது நாளாக, 200,000-க்கும் மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுடில்லியில் மட்டும் நேற்று, 25,500 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்