Images
  • delhi pollution
    (கோப்புப் படம்: AFP)

டில்லியில் காற்றுத்தூய்மைக்கேடு - கடுமையான நடவடிக்கைகள் தேவையா? நீதிமன்றம் விசாரணை

டில்லி அரசாங்கம் காற்றுத்தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பதை ஆராய இந்திய உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவிருக்கிறது.

மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது பற்றி நீதிபதிகள் கலந்துபேசுவர்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

டில்லியில் கடந்த பல வாரங்களாகக் கடுமையான புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.

நோய்ப்பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஏற்கனவே கடும் இடையூறுகளை ஏற்படுத்திவிட்டதாக மத்திய அரசாங்கம் கூறுகிறது.

காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாகக் கூறி, டில்லி அதிகாரிகள் கட்டுமானப் பணிகளுக்கு விதித்த தடையை அகற்றியிருக்கின்றனர்.

காற்றின் தரம் மீண்டும் மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டதால், பள்ளிகளும் அலுவலகங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. 

Top