Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: புதுடில்லியில் காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டுள்ளது - கட்டுமானங்களைத் தொடர அனுமதி

இந்தியா: புதுடில்லியில் காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டுள்ளது - கட்டுமானங்களைத் தொடர அனுமதி 

வாசிப்புநேரம் -

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டுள்ளது.

அதையடுத்து அங்குக் கட்டுமான நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

இருப்பினும் பள்ளிகளும் வேலையிடங்களும் வரும் புதன்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என்று புதுடில்லியின் சுற்றுப்புற அமைச்சு இன்று தெரிவித்தது.

புதுடில்லியின் காற்றுத்தரம் இன்று 303 குறியீடாக இருந்தது. கடந்த வாரம் அது 500-ஐ எட்டியது.

காற்றின் தரம் மேம்படும் வேளையில் நிலைமை அணுக்கமாய்க் கவனிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுப்புற அமைச்சு கூறியது.

காற்றுத் தூய்மைக்கேட்டிற்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைதான் முக்கியக் காரணமென்று கூறப்படுகிறது.

காற்று தூய்மைக்கேட்டால் புதுடில்லியில் பிள்ளைகள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

- Reuters/ng 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்